கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம்.

டெல்டா மாறுபாடு தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் , கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது.

ஏஎம்எஸ் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ, தடுப்பூசி இலக்குகளை அடைந்து கோவிட் 19 தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் நிலையிலேயே கோரோனோ தளர்வு தொடங்கியிருக்க வேண்டும் , அதற்கு நான்கு முதல் எட்டு வாரங்ககள் இன்னும் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார் .

“ஒரு தொழில்முறை அமைப்பாக, தற்போதைய மோசமான சூழ்நிலையில் முடிவெடுப்பவர்களை எச்சரிப்பது மற்றும் எச்சரிக்கை செய்வது நமது முதன்மையான பொறுப்பாக உணர்கிறோம். இத்தகைய தளர்வுகள் பொது மக்களை சென்றடையும் போது, ​​ஏற்கனவே வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் உட்பட்டு இருந்தவர்கள் சுதந்திர பறவைகள் போன்று திரியும் பொழுது ஐந்தே நிலைமை மேலும் சிக்கலாகும், இதன் மூலம் மேலும் தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

“எனவே, கோவிட் -19 கட்டுப்பாட்டு நெறிமுறைகள், குறிப்பாக இந்த கொடிய டெல்டா மாறுபாடு அதிகரித்து வருவதால், அரசு மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் ஆக்ஸிஜன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிப்பதால், அவர்களுக்கு சேவைகளை வழங்கும் திறன் அதி உச்சத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் விநியோகத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews