எரிவாயுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து மக்கள்..அரச அதிபரின் தலையீட்டால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்…..!

யாழில் உள்ள எரிபொருள் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் மொத்த விற்பனை நிலையத்துக்கு முன்னால்  காத்திருந்த மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அரச அதிபரின்  தலையீட்டை அடுத்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மொத்தக் களஞ்சியசாலையில் அதிகாலை தொடக்கம் மக்கள் எரிவாயக்காக வரிசையாக நின்று உள்ளனர்.
 இந்நிலையில் குறித்த மொத்த நிலையத்தில் கடமையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இங்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அருகிலுள்ள விநியோக நிலையங்களுக்கு செல்லுமாறு வரிசையில் நின்ற மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த விற்பனை நிலையங்களுக்கு மக்கள் சென்ற நிலையில் அங்கு எரிவாயு சிலிண்டர்கள் வராத நிலையில் மீண்டும் களஞ்சியசாலைக்கு மக்கள் வந்துள்ளனர்.
அங்கு நின்ற மக்களிடம் அரச அதிபர் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு தமக்கு கூறியதாக மக்களிடம் தெரிவித்த நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
அங்கு நின்ற ஊடகவியலாளர் அரச அதிபரிடம் குறித்த விடையம் தொடர்பில் தொளிவுபடுத்திய நிலையில் அவ்வாறான தகவல்களைத் தான் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார் .
 இன் நிலையில் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயுவை வைழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் இரு வீதியையும் மூடி அங்கு நின்றவர்களுக்கும் மட்டும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெற்றது

Recommended For You

About the Author: Editor Elukainews