பளையில் ஊடகவியலாளர் கைது…..!பொலிசாரின் திட்டமிட்ட சதியென விசனம்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர்.

அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி  கிராமத்தில் புதிதாக யாரும் குடிவந்துள்ளனரா என்று வினாவிய போது அப்படி யாரும் இல்லை நீங்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவியுங்கள் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஏனைய நிர்வாகங்கள் ஊடாகவும் விசாரித்த போது அப்படி யாரும் இல்லை உடனடியாக பொலிசாருக்கு தெரியபடுத்துங்கள் என்று கூறியதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது அதற்கு பளை பொலிசார் கூறியது இங்கு ஆட்கள் இல்லை என்று பின் இராணுவத்திற்கு தகவல் வழங்கியிருந்தார்கள் பின் சமூக அக்கரையாளர்களான பளை இளைஞர் அணிக்கும் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்களுடன் குறித்த ஊடகவியலாளரும் சென்றுள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக வந்திருந்த இரு ஜோடிகளும் சமூக சீர்கேடாக ஒரு பற்றை பகுதியில் இருப்பதை அனைவரும் கண்டுள்ளனர்.இதனையடுத்து அவர்கள் கிராம மக்களால் விசாரிக்க முற்பட்ட போது தப்பி ஓடுவதற்கு முயன்றுள்ளார்கள் பின்னர் அவர்களை பிடித்து விசாரித்த போது உண்மைக்கு புரம்பான கதைகளை கூறினார்கள்.பின் ஆள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது அட்டையை உடைத்துள்ளார்.குறித்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளரை குறித்த சந்தேக நபர் தாக்க முற்பட்ட போது பளை இளைஞர் அணியை சேர்ந்த ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த ஊடகவியலாளரை தாக்க முற்பட்டனர். பின் அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.பின் பொலிஸ் நிலையம் சென்ற குறித்த சந்தேக நபர்கள் பொலிசாரின் தூண்டுதலில் பளை பொலிசாரின் பல குற்றச்செயல்களை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்  மீது பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.பின்னர் குறித்த ஊடகவியலாளரை அழைத்த பளை பொலிசார் வாக்குமூலம் ஒன்றை பெற வேண்டும் என்று கூறிய போது பளை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த (20)திகதி மனைவி குழந்தையுடன் சென்றுள்ளார்.
பல மணி நேரமாக முறைப்பாட்டாளர்கள் வர வேண்டும் என்று கூறி அமர்த்தி வைத்தனர் பல மணி நேரங்கள் காக்க வைத்துள்ளனர்.பின் மாலை திடீரேன குறித்த ஊடகவியலாளரை சிறையில் அடைத்துள்ளனர்.
மறுநாள் (21) திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தி பின்னர் (23)திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது பளை பொலிஸ் பொறுப்பதிகாரி திட்டமிட்டே இவ்வாறு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குறித்த சம்பவத்தை அடுத்து அநீதிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க அச்சப்படுவார்கள் எனவும் பளை பொலிசாரின் இந்த செயலை வண்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews