வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ். – வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுடைய தலைமையில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews