சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதில் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு.

சபாநாயகர் ஆசனத்தில் வந்து அமருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் தினேஸ் குணவர்த செயற்பட்டார் என்றும் எனவே இதற்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் என்பது சுதந்திரமான நிறுவனமாகும். அது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றம் அல்ல. சகல உறுப்பினர்களும் சம உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினையொன்று ஏற்படுத்து கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews