காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனரகாலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருந்ததாக முன்னராக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் தற்போது பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews