குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பம்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு மேற்கொள்வது கட்டாயமாகுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, iஅஅபைசயவழைn.பழஎ.டம எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தல் அல்லது 0707101060 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குறிப்பிட்டப்பட்டுள்ளது.

நாளாந்தம் 2 ஆயிரம் கடவுச் சீட்டுகளை மாத்திரம் வழங்குவதற்கான திறனை திணைக்களம் கொண்டிருப்பதன் காரணமாக அவசியமற்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில் முன்பதிவினை மேற்கொள்வது கட்டாயமாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews