முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ வீட்டில் 300 யூரியா மூடைகள், 3,000 லீற்றர் டீசல், 200 நெல் மூடைகள் மீட்பு!

திஸ்ஸமஹாராம, கிரிந்த மாகம பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து 300 யூரியா உர மூடைகள், 3000 லீற்றர் டீசல், 200 நெல் மூடைகள் மற்றும் சிவப்பு பருப்பு மூடைகள் என்பனவும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் திம்புலாகல பந்தனகலவில் அமைந்துள்ள பண்ணையிலிருந்து 400 மூடைகள் யூரியா உரம் மற்றும் இரசாயன உரங்கள் என்பனவும்  மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews