தீவகம் – சரவணையில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.சரவணை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 11வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சரவணை பகுதியை சேர்ந்த ரூபன் ஜதுசா (வயது11) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் அயல் வீட்டுக்கு சென்ற சமயம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.

இதன்போது கால் தடக்கி கிணற்றுக்குள் விழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சிறுமியை மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாயைில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews