நோயாளிகளுடன் காவு வண்டி வீதியில், சாப்பிட சென்ற சாரதி, வங்கியில் பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர், உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி..! யாழ்.நகரில் சம்பவம்.. |

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியின் சாரதி நோயாளிகளுடன் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு சென்ற நிலையில், நோயாளர் காவு வண்டியில்  உள்ள சுகாதார ஊழியர் வங்கியில் பணம் எடுக்க சென்ற பொறுப்பற்ற சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர்.

குறித்த சம்பவம் யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய  நோயாளர் காவு வண்டியின் சாரதி, நோயாளர்களை வண்டியிலேயே இருத்திவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.

எனினும் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக நேரத்தை வீணடித்துள்ளார். அதேநேரம் வண்டியில் வந்த சுகாதார ஊழியர் வங்கிக்கு சென்றுள்ளார். அவரும் தனது சொந்த தேவையை நிறைவேற்ற வெளியே சென்றுள்ளார்.

குறித்த வண்டியில் முதியவரும் இரு பெண் நோயாளர்களும் இருந்துள்ளனர். நண்பகல் என்பதால் வெயில் வெக்கை தாங்காது நோயாளர்கள் வண்டிக்குள் இருந்து நோயாளிகள் அவதிப்பட்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews