மன்னாரில் மலேரியா விழிப்புணர்வு நடைபவனி –

மன்னாரில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, மலேரியா விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவனி, இன்று காலை 8.30 மணியளவில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பான ஆரம்பமானது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில், விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.

ஊர்வலத்தில், வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, மலேரியா தொற்று தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த ஊர்வலம், பிரதான வீதியூடாக, மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
மீண்டும் அங்கிருந்து, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews