ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பௌத்த பிக்குகள்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையை பெருமளவான பிக்குமார் திடீரென சுற்றிவளைத்தமையினால் அமைதியின்மை நிலவியுள்ளது.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்த பெருமளவான பௌத்த பிக்குமார்கள் மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசிக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது ஆர்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியதுடன், அங்கு பொலிஸ் கலகமடக்கும் பிரிவினர் மற்றும் தண்ணீர்தாரை பிரயோக வாகனங்கள் என்பன வரவழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு சர்வமத தலைவர்கள், இளைஞர்,யுவதிகள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், பல்கலைகழக மாணவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகை முன்பாக இன்று 7ஆம் நாளாகவும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews