பணம் கொடுத்து வாங்கிய சீமெந்தை கொடுக்க மறுத்த வியாபாரி..!

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 22ம் திகதி பை ஒன்று 2350 ரூபாய் வீதம் பொதுமகன் ஒருவரினால் சீமெந்து கொள்வனவு செய்யப்பட்டு அதற்கான பணமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் வர்த்தக நிலையத்திலிருந்து சீமெந்து பைகளை அன்றைய தினமே எடுக்க முடியாத நிலையில் அவர் வெளியூர் சென்றுள்ளார். பின்னர் நேற்றய தினம் தான் ஏற்கனவே கொள்வனவு செய்திருந்த சீமெந்து பைகளை எடுப்பதற்காக குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்தபோது சீமெந்து விலை கூடிவிட்டது ஆகவே பழைய விலைக்கு சீமெந்து தர முடியாது. என கூறித்த வர்த்தகர் கூறியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஒருவர் பணம் கொடுத்து வாங்கிய பொருளுக்கு விலை அதிகரிப்பை காரணம் காட்டி எப்படி மேலதிக பணம் கேட்கலாம். என சீமெந்து வாங்கியவர் குழப்பமடைந்த நிலையில் குறித்த வர்த்தகர் சீமெந்து வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக கூறியதுடன், தன்னிடம் சீமெந்து இருப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனால் 22ம் திகதி சீமெந்து வாங்கிய பொதுமகன் அங்கிருந்து வெறுங்கையுடன் சென்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews