14 ஆவது நாளாக தொடரும் “கோட்டா கோ ஹோம்” மக்கள் எழுச்சி

நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி, கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ச்சியாக தங்களது ஆதவை வழங்கிவருவதுடன், வெளிநாடுகளில் வாழக்கூடிய புலம்பெயர் மக்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இப் போராட்டமானது ஒவ்வொரு நாட்களிலும் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்டு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews