இரு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் இல்லை..! கோபத்தில் வீதியை முடக்கிய மக்கள்.. |

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 2 நாட்களாக வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காததால் கோபமடைந்த மக்கள் வீதியை மூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் நேற்று இரவு கண்டி – கொழும்பு வீதியில் பதற்றம் நிலவியது. 

இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றும் எரிபொருள் கிடைக்காததால் பெருமளவான மக்கள்  இரவு 7.30 மணியளவில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வாகனங்களை மறித்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கோட்டாவை விரட்டியடிப்போம் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர், பெம்முல்ல, கம்பஹா, வீரகுல, யக்கல. மற்றும் நிட்டம்புவ காவல் நிலையங்களில் இருந்து பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

வீதியின் இருபுறமும் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், எஞ்சியிருந்த சிறிய இடைவெளியில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews