இன்று 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்றைய தினம் சுமார் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும்,

மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும்,

மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews