மதுபான சாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச செயலருக்கு மகஜர்…..!

பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை புதிய இடம் ஒன்றிற்க்கு மாற்றப்படவுள்ளதாகவும், எனவே அச்சூலில்  இரண்டும் ஆலயம், தபாலகம், பாடசாலை உட்பட மக்கள் குடியேற்றங்கள் உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறு கோரி குறித்த பகுதியில் சுமார் நூறு மீட்டர் சூழலில் உள்ள வைரவர், மற்றும் முருகன் ஆலயங்கள்  ஆகியவற்றின் பரிபாலன சபையினர் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு மகஜர் கையளித்துள்ளனர்.
பருத்தித்துறை நகர் பகுதியில் சிவன் ஆலயத்திற்க்கு முன்பாக இவ்வளவு காலமும் இயங்கிவந்த நிலையில் குறித்த மதுபான சாலை தொடர்ந்தும் இயங்குவதற்கு பருத்தித்துறை நகரசபை நடப்பாண்டிறக்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே  பிறிதொரு இடத்திற்க்கு மாற்றப்படவுள்ளதாகவும் இதனை தடை செய்யக் கோரியே குறித்த மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin