வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் மற்றும் பெற்றோல் நிரப்ப வாகனங்கள் நீண்டவரிசை……!

வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் மற்றும் பெற்றோல் நிரப்புவதற்க்கு வாகனங்கள் நீண்டவரிசையில் நேற்று பிற்பகல்  4:00 மணியிலிருந்து காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் நிரப்ப பருத்தித்துறை யாழ்பாணம் வீதியிலும் பருத்தித்துறை சரசாலை வீதியிலும் நீண்ட வரிசையில் அரச திணைக்கள வாகனங்கள் தனியார் போக்குவரத்து சேவை வாகனங்கள் ரிப்பர்கள், பார ஊர்திகள் மற்றும் இலகுரக வாகனங்கள் என்பன மிக நீண்ட வரிசையில் காணப்படுகிறது.அதே போன்று பெட்ரோல் நிரப்பவும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று நிரப்பி செல்வதை அவதானிக்க முடிகிறது.
எனினும்  மண்ணெண்ணெய் இல்லை.
வடமராட்சி குஞ்சர்கடை,சாரையடி,  வல்வெட்டித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எந்தவிதமான எரிபொருளும் இல்லை. நெல்லியடி, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் மட்டும் விநியோகிக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: admin