கொடிகாமத்தில் மணல் கள்ளர்கள் அட்டகாசம்..! காணி உரிமையாளரை தாக்கி, மோட்டார் சைக்கிளை கொழுத்தினர்.. |

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் தாக்கியதில் 43 வயதான நபர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் கொடிகாமம்- பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த பகுதியில் தனது காணிக்குள் மணல் அகழப்படுவதை அறிந்து அதனை தடுக்க சென்ற காணி உரிமையாளர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் அவருடைய மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். காயமடைந்தவர் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையல் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: admin