இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் நிபுணர் ஜெயக்குமார் தெரிவு!

வைத்திய நிபுணர் நடராஜா ஜெயக்குமார் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மத்தியில் அவர்களை உடல் உள ரீதியாக ஆற்றுப்படுத்துவது வைத்திய நிபுணர்கள் தனக்கென தனித்துவமான அணுகுமுறையை கொண்டவர். அவரது நோயாளர் நலன் சார்ந்து கரிசனைக்காகவே பல நோயாளர்கள் அவரிடம் சிகிச்சை பெற வேண்டுமென வலிந்து நிற்பது உண்டு. காரைநகர் மண்ணை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குறிப்பிடத்தக்க உற்பத்தி எல்லாவற்றுக்கும் மேலாக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைவதற்கு பல பரிமாணங்களில் தன் முயற்சியை நல்கியவர். சட்டத் துறையிலும் தன் பட்டப் படிப்பை நிறைவு செய்து ஒர் சட்டவாளராகவும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin