கலாசார மத்திய நிலைய திறப்பவிழாவில் பௌத்த மதகுருவுக்கு முன்னுரிமை! ஒத்துாதிகள் குறித்து மக்கள் முணு முணுப்பு.. |

யாழ்.சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தின் திறப்புவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்காத சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு அனைத்து மத குருமார்களும் வருகைதந்திருந்தனர். இதன்போது மங்கள விளக்கேற்றல் மற்றும் ஆசியுரை வழங்கல் என்பன முதலில் பௌத்த மதகுருவால் நிகழ்த்தப்பட்டது.

தமிழர்களின் பூர்வீக பிரதேசமான பிரதேச செயலகத்தின் இவ்வாறான நிகழ்ச்சி நிரலானது வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்துகின்றது.

என குறித்த நிகழ்விற்கு வந்தவர்கள் முனுமுனுத்தமையை அவதானிக்க முடிந்தது. ஆகவே தமிழ் மொழியும், தமிழர்களின் கலாச்சாரமும் திட்டமிட்டு  அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் பிரதேச செயலகமும் அதற்கு வழிவகுத்து கொடுப்பதுபோன்று செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: admin