வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கிற்க்கு புதிய நிர்வாகம் தெரிவு….!

வடமராட்சி கிழக்கு உதை பந்தாட்ட லீக்கிற்க்கான  புதிய நிருவாக தெரிவு அதன் முன்னாள் தலைவர் தங்கவேல் தங்கநிதி நேற்று (04/03/2022)தலமையில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 5:30 மணிக்கு  இடம் பெற்றுள்ளது.

இதில் தலைவராக வேலுப்பிள்ளை பிரசாந்தனும், உப தலைவராக விஸ்வலிங்கம் கிருஸ்ணகரனும், செயலாளராக இராசலிங்கம் ஜெயமுகுந்தனும், உப செயலாளராக தங்கவேல்  தங்கறதீசும், பொருளாளராக சுந்தரலிங்கம் கோகுலதாசும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏழுபேரும் தெரிவு செய்யபவபட்டுள்ளனர். இதில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க தலைவர் முத்துக்குமார் நகுலேஸ்வரன் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: kathiresu bavananthy