யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 9 பெண்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான வெளிமாவட்டத்தை சேர்ந்த 9 பெண்களையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது.

சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை நோட்டமிட்டுள்ளனர்.

அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய வளாகத்தில் நடமாடிய சில பெண்களை விசாரித்த வேளை அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பெண்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin