மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்திகள், டோர்ச் லைட்டுகளுடன் யாழ்.செம்மணியில் போராட்டம்..!

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்று மாலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில்  மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. 
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன்

மற்றும் கே.சயந்தன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள்,

தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin