இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்த 7 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 13 ஆம் திகதி குறித்த கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews