ஊடகவியலாளர் மெலிசியா கொலை விவகாரம்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மேல் நீதிமன்றம்

ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் அன்டனி ரம்சன் ஜோர்ஜ் என்பவருக்கே மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பத்தரமுல்லை, சுபுத்திபுர பகுதியில், ஊடகவியலாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஊடகவியலாளர் மெலிசியா கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொள்ளையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அருளானந்தம் அன்டனி ரம்சன் ஜோர்ஜ் எனப்படும் பிரதிவாதிக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மரண தண்டனையில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில்,மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin