காதலியும், மனைவியும் ஒரு நாளில் உயிரை மாய்க்க முயற்சி..! 60 வயதான காதலி மரணம், 32 வயதான மனைவி காப்பாற்றப்பட்டார்.. |

நபர் ஒருவரின் 60 வயதான காதலியும் 32 வயதான மனைவியும் ஒரே நாளில் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் மனைவி காப்பாற்றப்பட்டபோதும் காதலி உயிரிழந்த சம்பவம் களுபோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் கணவனை இழந்த 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் குறித்த பெண் தனது சொத்துக்களையும் குறித்த நபருக்கு ஏழுதிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் இரகசியமான 32 வதான பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த 60 வயதான பெண் புதிதாக திருமணம் செய்த 32 வயதான பெண்ணுடைய வீட்டுக்கு சென்று தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். இதே சமயம் தனது கணவர் 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த புதிதாக திருமணமான 32 வயதான பெண்ணும் உயிரைமாய்க்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து இருவரும் காப்பாற்றப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 60வயதான காதலி உயிரிழந்துள்ளார். எனினும் 32 வயதான மனைவி காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த 60 வயது பெண் தான் நீண்டகாலம் காதலித்த 40 வயதுடைய நபருக்கு எழுதிய பல பக்கங்களை கொண்ட கடிதமொன்று கண்டெடுக்கப்பட்டதாக பிரேத பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews