தெரிவு செய்யப்பட்ட கரவெட்டி சமுர்த்தி  பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு……!

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளுக்கு இன்றைய தினம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்   உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் போட்டோ கொப்பி இயந்திரங்கள், நீர்ப்பம்பிகள், தையல் இயந்திரங்கள் உட்பட்ட பொருட்களே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன், சமுர்த்தி தலமை பீட முகாமையாளர் இ. அன்ரனி,கருத்திட்ட முகாமையாளர் ந.சுமீரா, ஆகியோரால் இவ் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப‍்பட்டுள்ளது.
கடந்த வருடம் வாழ்வாதார கருத்திட்டத்திற்க்கு அமைவாக 563 பேருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாய, கைத்தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்ற திட்டங்களினூடாக போட்டோ கொப்பி இயந்திரங்கள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பிற்காக கொட்டகைகள் அமைத்தல், நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள்,  மேசன் வேலைகளுக்கான சப்போட்டிங் செற், தச்சு வேலைக்கான உபகரணங்கள் என பயனாளிகள் தேவைகளுக்கேற்ப வழங்கப்பட்டு வருவதாகவும் கரவெட்டி சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் இ.அன்ரனி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews