வடமராட்சி மீனவர்கள் போராட்டத்திற்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு…..!

கடந்த 30/01/2022 ம் திகதி முதல் பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து தொண்டமனாறு வரை வீதியை மறித்து எல்லை தாண்டும் மீனவர்களை தடை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான ஆவணத்தை கோரி நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு பருத்தித்துறை கௌரவ நீதவான்  நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 1979 ஆண்டு 15 ம் இலக்க குற்றவியல் வழக்கு சட்டம்  106/1 பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் எனும் பிரிவின் கீழே இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத் தடை உத்தரவு பருத்தித்துறை நீதவான் நீதி மன்ற எல்லைக்குள் இவ்வாறு வீதியை மறித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்கள் நடாத்துவதற்க்கே இவ்வாறு தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை பருத்தித்துறை போலீஸ் நிலையத்தை சூழ பல்வேறு இடங்களிலிருந்தும் போலீசார் வரவளைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, பளை உட்பட பருத்தித்துறை போலீஸ் நிலைத்திற்க்கு சமூகமளித்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews