யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரகமுக பல்கலைகழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய குருதி மாதிரியை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியை சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் நேற்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews