முகத்தில் மிளகாய் துாள் வீசி, கத்தியால் குத்தி கொலை..! அயல் வீட்டாரால் தொந்தரவு என்று கூறியதற்காக நடந்த பயங்கரம், 7 பேர் கைது.. |

குடும்பஸ்த்தரின் முகத்தில் மிளகாய் துாள் வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு அயலில் வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுனகஹா கிழக்கு பள்ளியப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த கே.வின்சன் என்ற 60 வயதான நபரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவி உயிரிழந்த பின் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயல் வீடுகளில் குடியேறியவர்களால் தனக்கு தொந்திர எனக் கூறியதன் காரணமாக ஏற்பட்ட தகராறை அடிப்படையாக கொண்டு சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மிளகாய் தூளை வீசி,

கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நபரை கொலை செய்த பின்னர் சமையல் அறையில் இருந்த மிளகாய் தூளை உடல் முழுவதும் பூசியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர்களின் வீடுகளை சில தீயிட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews