அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும், சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்பவரெனவும்,நேற்றைய தினம் பிள்ளைகளை அவர்களது தாயாரிடம் காண்பிக்க வேண்டியிருந்ததாகவும்,தாயார் பிள்ளைகளை பார்க்க சென்ற நிலையில் அவர்கள் வரவில்லையெனவும், இதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பின்னர் பொலிஸார் சென்று தந்தையின் சடலத்தை வீட்டிலுள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முகப்புத்தக வளைத்தளத்தில் 18 நிமிட காணொளியினை பதிவேற்றி தனக்குள்ள மன உளைச்சல் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஒரு பாடகர் எனவும்,மன உளைச்சல் காரணமாகவே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews