பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Malik புயல்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை –

Malik புயலில் இருந்து மணிக்கு 150 மைல் வேகத்தில் சக்தி வாய்ந்த காற்று பிரித்தானியாவை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

மேலும், மாலிக் புயலைத் தொடர்ந்து Corrie புயல் நாளை மேலும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மரம் விழுந்ததில் 60 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார்.

இது குறித்து ஸ்காட்லாந்து பொலிஸின் செய்தித் தொடர்பாளர், உயிரிழந்த அப்பெண்ணின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

சனிக்கிழமையன்று ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசியது, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள Cairngorm-ல் 147 மைல் வேகத்தைக் கண்டதாக வானிலை ஆய்வாளர் கூறுகிறார்.

இது உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர்களில் ஒன்றான ஃபார்முலா ரோசாவிற்கு ஈடான வேகம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சவுத் ஷீல்ட்ஸ், டைன்சைடில் சனிக்கிழமை காலை மாலிக் புயல் வீசியதில் சுவர் இடிந்து விழுந்ததில் Range Rover கார் நசுங்கியது. அதிலிருந்த ஒரு உணவாக உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாலிக் புயல் அதிக காற்று மற்றும் மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவைதால், ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் சனிக்கிழமையின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஸ்காட்லாந்திற்கு அம்பர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு காற்றின் சேதம் சாலை, ரயில், விமானம் மற்றும் படகு சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்.

இதற்கிடையில், ஞாயிற்றுகிழமை Corrie எனும் மற்றோரு புயல் பிரித்தானியாவை குறைந்தது 90 மைல் வேகத்தில் தாக்கும் என்றும், அதன் பங்கிற்கு மேலும் பேரழிவைக் கொண்டுவரும் என வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews