சட்டவிரோதமான மணல் அகழ்வு, பலர் கைது, உழவியந்திரங்களும் கைப்பற்றப்பட்டது……!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் 25.01.நேற்று முன்தினம் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு 6 (six) S.R  இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டபோது
கல்மடுகுளம் பகுதியில்  உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களும்,  அதன் சாரதிகள் ஐவரும், சட்டவிரோகமாக உழவியந்திரத்திற்கு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களையும், உழவு இயந்திரங்களையும் தருமபுரம் பொலிசாரிடம் இராணுவத்தினர்  ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews