கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்….!மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார
நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர்
பொது மக்களை கேட்டுள்ளனர்.

கடந்த 24 ம் திகதி 66 தொற்றாளர்களும், 25/0/2022  40 தொற்றாளர்களும்,  இனம் காணப்பட்டுள்ளனர்.  தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால் சமூகத்தில் இதனை விட அதிகளவான தொற்றாளர்கள் காணப்படலாம் என்றும்,
எனவே பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ள சுகாதார பிரிவினர். மாவட்டத்தில் பெரும்பாலான பொது
மக்கள் எவ்வித கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது
நடந்துகொள்வதாகவும் கவலை  தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்று அதிகளவில் வேகமாக பரவி வருவதனால்  பொது மக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார தரப்பு  பொது மக்களை
கேட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews