வல்வெட்டித்துறை நகரசபைக்கு உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் ஏகமனதாக தெரிவு…..!

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் காலை 10 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் வல்வெட்டித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளார்

இதில் உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஷ்வரன்
அமர்வில் கலந்து கொண்ட ஒன்பது  உறுப்பினர்களால்  ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றைய உப தவிசாளர் தெரிவில்

தமிழ்  தேசிய கூட்டமைப்பிலிருந்து 5 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரும்,  சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவருமாக மொத்தம் ஒன்பது பேருமே  ஏகமனதாக உப தவிசாளரை தெரிவு செய்தனர்.
17 பெயரைக் கொண்ட வல்வெட்டித்துறை  நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும்,  ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவரும், சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவருமாக ஆறு பேர் சமூகமளிக்கவில்லை, என்பதுடன் ஒருவர் பதவி விலகிய காரணத்தினாலும்,  ஒருவர் இறந்த  நிலையிலும் இருவருக்கு வெற்றிடம் காணப்படுகிறது.
கடந்த வருட இறுதிப் பகுதியில் தவிசாளராக
திரு செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews