பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானைகளால் நெற்பயிர்கள் நாசம்…..!

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சில தினங்களாக யானைகள் துவம்சம் செய்துவருவதாக பாட்டாளிபுரம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


நேற்றிரவு சுமார் 20 ஏக்கர் நெற்பயிரை  காட்டு யானைகள் முழுமையாக நாசம் செய்துள்ளன.

யூரியா பசளை இன்று ஏற்கனவே தமது வயல் நிலங்கள் விளைச்சல் குறைவடைந்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு  காட்டு யானைகள் தமது வயல் நிலங்களை துவம்சம் செய்வதால் தாம் பெரிதும்  பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிப்பதுடன்

யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடம் சுமார் 20 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இன்னும் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரப்பட வில்லை எனவும், எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமது வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு தோப்பூர் – பாட்டாளிபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews