விசமிகளால் உந்துருளிக்கு தீ வைப்பு, முற்றுமுழுதாக எரிந்து நாசம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்றிற்க்கு  தீ மூட்டப்பட்டு  எரிக்கப்பட்டுள்ளது.
 குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 16/01/2022  இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம்  இரவு ஒன்பது முப்பது மணியளவில் உந்துருளி தீப்பற்றி எரிந்ததை அவதானித்த. வீட்டுக்காரர்கள் ஓடிச் சென்றபோது நபர் ஒருவர்  ஓடிச் சென்றதையும் அவதானித்துள்ளனர்.
 உந்துருளியின் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது  முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலீசாரை தொடர்புகொண்டு கேட்ட போது  குறித்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் என சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews