பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவு.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில்   இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன.

அதற்கான செலவீனமும் இந்த 90 மில்லியனுக்குள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் உணவுகள், பானங்கள் விரயமாவதைத் தடுப்பதற்காக பாராளுமன்றச் செயலளார் தம்மிக்க தசநாயக்கவினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறும் போது, அவர்களது சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அரசி, மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin