சுபீட்சத்தின் நோக்கு இயற்கை விவசாய திட்டம் வடமராட்சியில் ஆரம்பம்……!

இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உற்பத்தி செய்யும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்த்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசளையை பயன்படுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து இப் பசுமை வீட்டுத் தோட்டத்தின் மூலம் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டம் நேற்று வடமராட்சி வலய கல்வி வலயத்தால் இராணுவம் இணைந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க. சத்திதபாலன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், 55 வது படை பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்தின, ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாபரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, மற்றும் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலைகளின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இயற்கை முறையிலான இயற்கை உர வகைகளை பயன்படுத்தி மரக்கறி பயிர் செய்கைக்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் இலங்கை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் முதலாவது செயற்றிட்டமே நேற்று இடம் பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews