இரண்டுவாள்களுடன் இருவர் கைது.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில், 12.01.2022 நேற்றைய தினம் சிறப்பு அதிரடிபடையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக  வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இரண்டு வாள்களும்   சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 13.01.2022 இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டநீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin