யாழ்.நெல்லியடியில் வைத்தியர்களின் அசண்டையீனத்தால் உயிரிழந்த பெண்! சம்மந்தப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு.. |

யாழ்.நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட தரப்புக்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.

மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

புற்றுநோய் காரணமாக கர்ப்பபையை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை யாழ்.நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்டிருந்த நிலையில் அவருடைய உடலில் துணி ஒன்று வைத்து தைக்கப்பட்டதால் கிருமி தொற்று ஏற்பட்டு அதனால் அவர் உயிரிழந்துள்ளார்.

சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையிலும் பெண்ணின் உடலில் துணி வைத்து தைக்கப்பட்டதாலேயே கிருமி தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டதுடன்,

தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி உளளிட்டோரை இன்று நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews