கஞ்சா பொட்டலங்களுடன் மதுபோதையில் அலைந்து திரிந்த பிக்கு கைது! |

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில் மதுபோதையில் அலைந்து திரிந்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்ட பிக்கு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் பிக்குவை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பிக்குவிடமிருந்து கஞ்சா போதைப்பொருள் பக்கட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்கு உள்ளிட்டவர்கள் பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காருக்குள்ளிருந்தும் மற்றுமொரு கஞ்சா பக்கட், மீட்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பிக்குவும் சாரதியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews