ஸ்லோன் நிறுவனத்தினரால் நீர் குழாய் பொருதுநர்களுக்காக பயிற்சி….!

ஸ்லோன் நிறுவனத்தினரால் நீர் குழாய் பொருதுநர்களுக்காக பயிற்சி நடாத்தப்டுள்ளது.
ஸ்லோன் நிறுவனத்தினாரால் வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள கரவெட்டி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கி குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பிந்திய தொழில் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை இன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பமானது.
ஸ்லோன் நிறுவனத்தின் விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் C. பிரசன்னசா தலமையில் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மங்கள விளக்குகளையும் கருத்துரைகளையும்,  ஸ்லோன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகான் அமரசிங்க, வடமாகாண கல்வித் திணைக்கள பொறியியலாளர் V.மேனன்,  ஸ்லோன் விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் C. பிரசன்னா, உற்பத்தி மேம்படுத்தல் மற்றும் குழாய் பொருத்துவர் கழக முகாமையாளர் சிராஸ் முகமட், ஸ்லோன் பிராந்திய விற்பனை முகாமையாளர் திரு. ஆனந்தரூபன், ஸ்லோன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் முகமட் றிஸ்மி, ரேகா மோட்டார் உரிமையாளரும், அங்கீகாரம் பெற்ற விற்பனை முகாமையாளரருமான R.கிருபாகரன், பிராந்திய விற்பனை பிரதிநிதிகள் ,J.ஜெயந்த், ஜே.பீ.றொகான், A.லொறின்சன், ஆகியோர் வழங்கினர்,
இதில் வடமராட்சி பிராந்தியத்தில் குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சிகளை உற்பத்தி மேம்படுத்தல், மற்றும் குழாய் பொருத்துவர் கழக முகாமையாளர் சிராஸ் முகமட் வழங்கினார்.
இதில் வடமராட்சி பிராந்தியத்திலுள்ள சுமார் 125 வரையான குழாய் பொருத்துனர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews