நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து உணவு மற்றும் பணம் திருட்டு! திருடிய உணவை அங்கிருந்தே சாப்பிட்டுவிட்டு வெளியேறிய திருடன்.. |

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் கூறுகையில், அதகாலை  5 மணிக்கு நாங்கள் கடையை திறக்க வந்தபோது கண்காடி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் சீ.சி.ரீ.வி கமரா பதிவுகளை பார்த்தபோது,

நிர்வாணமாக கடையின் கண்ணாடியை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர் கடைக்குள்ளிருந்த உணவுப் பொருட்களை எடுத்து இங்கிருந்தே சாப்பிட்டு குளிர்பானங்களை அந்திவிட்டு,

கடையிலிருந்த சில்லறை காசுகள் மற்றும் கடையிலிருந்து ஒரு தொகை பணத்தையும் திருடி சென்றுள்ளதாகவும் கூறியதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews