கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது: மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை:

ராமேஸ்வரம் ஜன 07,

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (22). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி விமானம் மூலம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்துள்ளார்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள சந்திரசேகரன் உறவினர் உதவியுடன் சென்னையில் வேலைக்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் தமிழகத்தில் உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றபோது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்தது இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி தான் இலங்கைக்கு திரும்பி செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.ஆனால் சந்திரசேகரன் சுற்றுலா விசா காலாவதியானதால் இலங்கைக்கு திரும்பி செல்ல மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், சந்திரசேகரன்; கடந்த ஒரு வருடமாக சேலம் பகுதியில் தங்கி போர்வெல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் செல்வதற்காக கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டு வியாழக்கிழமை ராமேஸ்வரம் வந்துள்ளார்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மீனவர்களதனுஷ்கோடி அடுத்துள்ள நுன்றாம்சத்திரம் மெரைன் போலீஸ் சோதனை சாவடியில் சந்திரசேகரனை ஒப்படைத்தனர்.

பின்னர் அங்கிருந்து சந்திரசேகரனை தனுஷ்கோடிமெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சந்திரசேகரன் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றாரா அல்லது சுற்றுலா விசா முடிந்ததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே; சந்திரசேகரன் கடத்தல் சம்பவத்திற்காக தமிழகத்தில் பதுங்கி இருந்தார் என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர.

விசாரணைக்கு பின்னர் இவரை தனுஷ்கோடிக்கு சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews