அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்களுக்கான வரிகள் நீக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும்.
அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.
அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுகின்றது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews