பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறி ரஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபையின் முதன்மை உறுப்பினரும் முழங்காவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியருமாகன இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக கடந்த 15ம் திகதி தோற்கடிக்கப்பட்டது.
22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது பாதீடு 15.12.2021 சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இன்றைய தினம் குறித்த பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வசமிருந்த பூநகரி பிரதேச சபை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டது.
இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 11 பேர் கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்களில் தவிசாளர் தவிர்ந்த 10 பேரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் நால்வரும் ஆதரவாக வாக்களித்தனர். ஈபிடிபி கட்சி உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தார்.
இதனால் குறித்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது சமர்ப்பிப்பும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்மைப்பினர் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். தவிசாளரை பதவி விலகுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பினரால் கோரிக்கை விடப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews