பாம்பு தீண்டியதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் 10 நாட்களின் பின் உயிரிழப்பு!

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதற்கு சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியிருந்தார். எனினும் கடந்த 26ம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனிக்காமல் நேற்று காலை உயிரிழந்துள்ளார். 

Recommended For You

About the Author: Editor Elukainews