கிளிநொச்சியில் நத்தார் நிகழ்வு முடித்து பயணித்த அருட்தந்தையர்களின் வாகனம் மீது தாக்குதல்….!

கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு (27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்த போது
நேற்றிரவு (27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின்
அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு
திரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் இளைஞர் குழுவொன்று மது
போதையில்  மயில்வாகனபுரத்தில் வீதியில் மறித்து பணம் கோரியுள்ளனர்,
அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது  அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள்ப்பட்ட போதும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டனர் எனத்
தெரிவித்த அவர்கள்

இது தொடர்பில் தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது என்றும் தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலீஸார் தெரிவித்துள்ளதாகவும்
குறிப்பிட்டனர்.

மேலும் அருட்தந்தையர்கள்  தங்களது ஆடைகளுடன்  உள்ள போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவதூறாக பேசியமை மிகுந்த கவலையினை
ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews